உள்ளூர் செய்திகள்

 கோப்புபடம்

பள்ளிகள் திறந்ததும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த திட்டம்

Published On 2022-06-10 06:02 GMT   |   Update On 2022-06-10 06:02 GMT
  • 12 வயதை கடந்த சிறுவர், சிறுமியருக்கு மீண்டும் ‘கோர்பாவேக்ஸ்’ தடுப்பூசி பள்ளிகளில் செலுத்தப்பட உள்ளது.
  • பள்ளி விடுமுறை விடப்பட்டதால், பள்ளி அளவில் நடத்தப்பட்ட முகாம் நிறுத்தப்பட்டது.

திருப்பூர்,

கோடை விடுமுறைக்கு பின் வருகிற 13-ந் தேதி 1 முதல் 10-ம் வகுப்பு வரையும், பிளஸ் 2 மாணவருக்கு, 20-ந் தேதியும், பிளஸ் 1 மாணவருக்கு 27-ந்தேதியும் பள்ளி திறக்கப்படுகிறது.

12 வயதை கடந்த சிறுவர், சிறுமியருக்கு மீண்டும் 'கோர்பாவேக்ஸ்' தடுப்பூசி பள்ளிகளில் செலுத்தப்பட உள்ளது. அந்தந்த மாவட்ட அளவில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் - சுகாதாரத்துறையினர் ஆலோசித்து, மேல்நிலை, உயர்நிலை பள்ளி அளவில் தடுப்பூசி முகாம் நடத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் 85 சதவீத மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

ஒரு சில மாவட்டங்களில் 65 சதவீதம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.இந்த வயது பிரிவில் புதிதாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக முன்கூட்டியே முகாம் அமைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12 முதல் 14 வயதுக்குரிய தடுப்பூசியை 24.45 லட்சம் பேரும், 15 முதல் 17 வயதுக்குரிய தடுப்பூசியை, 43.48 லட்சம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளி மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்துவது வழக்கமானது தான். பள்ளி விடுமுறை விடப்பட்டதால், பள்ளி அளவில் நடத்தப்பட்ட முகாம் நிறுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதால், முகாம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News