உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்த திட்டம்

Published On 2022-06-28 07:38 GMT   |   Update On 2022-06-28 07:39 GMT
  • கொரோனா பரவல் அதிகரிப்பதால் பள்ளிகளில் தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
  • பெற்றோர்கள் பிள்ளைகள் தயக்கமும் இன்றி தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும்

திருப்பூர் :

கொரோனா நோயின் தாக்கத்தில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து, 12 முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கும் 'கோர்பேவாக்ஸ்' தடுப்பூசி போடப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

ஆனால் ஆண்டு பொதுத்தேர்வு காரணமாக, இதற்கான பணி தடைபட்டது. தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பதால் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி அளவில் தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மாவட்டத்தில் 6 முதல் 8-ம்வகுப்பு வரை பயிலும், 95 ஆயிரம் மாணவர்கள் இதுவரை தடுப்பூசி போட்டுள்ளனர். பொதுத்தேர்வுக்கு முன்னர் 15 முதல் 18 வயது வரை பெரும்பாலான மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.அதேசமயம் 12 முதல் 14 வயது வரையுள்ள மாணவர்களில் பலர் தடுப்பூசி செலுத்தவில்லை. மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதி செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெற்றோர், தங்கள் பிள்ளைகள் தயக்கமும் இன்றி தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும். இவ்வாறுஅவர்கள் கூறினர்.

Tags:    

Similar News