உள்ளூர் செய்திகள்
போடி அருகே மின் வேலியில் சிக்கி தோட்ட காவலாளி பலி
- அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் இரவு நேர காவல் வேலைக்கு சென்று வந்தார்.
- தோட்ட உரிமையாளர் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக மின் வேலி அமைத்திருந்தார். அதில் சிக்கி பலியானது தெரிய வந்தது.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது39). இவர் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் இரவு நேர காவல் வேலைக்கு சென்று வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் போடி மரிமூர் கண்மாய் அருகே உள்ள வாய்க்காலில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது அப்பகுதியில் உள்ள தோட்ட உரிமையாளர் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக மின் வேலி அமைத்திருந்தார். அதில் சிக்கி பாலாஜி பலியானது தெரிய வந்தது.
சம்பவம் குறித்து அறிந்ததும் குரங்கணி போலீசார் விரைந்து வந்து பாலாஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தோட்ட உரிமையாளர் சடையன் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.