உள்ளூர் செய்திகள்

பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாகூரில், பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-04-21 09:48 GMT   |   Update On 2023-04-21 09:48 GMT
  • பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
  • மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகூர் தர்கா அலங்கார வாசலில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பங்கேற்றார். பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

பின்னர் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தேசிய பசுமை படை மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாசுக்கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் ஒளி , தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் நாகூர் தர்கா நிர்வாக அறங்காவலர் முகமது காஜி, நகர் மன்ற உறுப்பினர் பத்ருநிஷா, சமூக ஆர்வலர் நாகூர் சித்திக், வணிகர் சங்க முன்னாள் செயலாளர் ரமேஷ் ஐயர் தேசிய பசுமை படை ஆசிரியர்கள் செல்வகுமார் சக்திவேல் மற்றும் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News