உள்ளூர் செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில் பிளாஸ்டிக், குப்பைகள் அகற்றி சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

தேசிய மாணவர்படை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு தூய்மை பணி

Published On 2022-12-29 09:43 GMT   |   Update On 2022-12-29 09:43 GMT
  • பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டு பெரிய கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிடந்த குப்பைகளை சேகரித்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை பெரிய கோவிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மை பணி இன்று காலை 34 தேசிய மாணவர் படை தஞ்சாவூர் சார்பில்

நடைபெற்றது.

இதில் தேசிய மாணவர் படை அதிகாரிகள் லெப்டி னைட்கள் சுரேஷ்பாபு, வசந்த், பேரரசன் மற்றும் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, கரந்தை தமிழ்வேள் உமா மகேஸ்வரனார், பூண்டி புஷ்பம் கல்லூரிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டு பெரிய கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிடந்த குப்பைகளை சேகரித்தனர்.

பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்தனர்.

புல் பூண்டுகளை அகற்றி சுத்தப்படுத்தினர். தொடர்ந்து பெரிய கோவிலுக்கு வந்தி ருந்த சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு பிளா ஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News