உள்ளூர் செய்திகள்

என்.எல்.சி. கால்வாய் தோண்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

Published On 2023-07-28 01:32 GMT   |   Update On 2023-07-28 01:32 GMT
  • கடந்த இரண்டு நாட்களாக நெற்பயிர்களை அழித்து கால்வாய் தோண்டு பணி நடைபெற்றது
  • பா.ம.க. போராட்டத்திற்கு சுமார் ஆயிரம் போலீசார் செல்ல இருப்பதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

கடலூர் என்.எல்.சி. நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் பணிக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. வளையமாதேவியில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் அறுவடை செய்ய இருக்கும் நெற்பயிர்கள் உள்ள இடத்தில் ஜே.சி.பி. இறங்கி கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

நெற்பயிர்கள் அழிக்கப்படுவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

நெய்வேலியில் இன்று பா.ம.க. போராட்டம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு பணிக்காக இந்த போராட்டத்திற்கு சுமார் ஆயிரம் போலீசார் செல்ல இருப்பதால், கால்வாய் தோண்டும் பணி பாதுகாப்பிற்கு போலீசார் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கால்வாய் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News