உள்ளூர் செய்திகள்

கடலூர் முதுநகரில் போலீசார் சார்பில் குற்ற செயல்களை தடுக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கடலூர் முதுநகரில் குற்ற செயல்களை தடுக்க போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

Published On 2023-04-09 07:55 GMT   |   Update On 2023-04-09 07:55 GMT
  • குற்ற செயல்களை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • சாலைகளில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுறுத்திலின் பேரில்  மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகள் மற்றும் வாகன சோதனைகள், விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் முதுநகரில் குற்ற செயல்களை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் குற்ற பிரிவு சப் -இன்ஸ்பெக்டர்கள் ரகுராமன், ரவி மற்றும் போலீசார் வெளியூருக்கு செல்லும் மக்கள் பாதுகாப்பாக வீடுகளை பூட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

கோடை காலம் என்பதால் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைப்பதை தவிர்க்க வேண்டும். சந்தேகப்படும் படியாக யாரையாவது பார்த்தால் வாகன பதிவு எண்களை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வீடு கடை மற்றும் அலுவலகங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும். வங்கிகளில் பணம் எடுக்க செல்லும் போது அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஏ.டி.எம். கார்டு மற்றும் குறியீடு எண்களை தெரிவிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் வாகனங்கள் மூலமும் முக்கிய சாலைகளில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News