உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை- எஸ்.பி. பாலாஜி சரவணன் நடவடிக்கை

Published On 2023-05-16 08:24 GMT   |   Update On 2023-05-16 08:24 GMT
  • 19 வாகனங்கள் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • வாகன சோதனையில் 160 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சி திருவிழாவின் போது அபாயகரமாகவும், பொது மக்களுக்கு தீங்கு விளை விக்கும் வகையில் விதிமுறை களை மீறி செயல்பட்டதாக தட்டப்பாறை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு கனரக வாகனம் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் மீதும், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையம் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 2 இரு சக்கர வாகனங்கள் மீதும், ஆத்தூர் காவல் நிலையத்தில் ஒரு இரு சக்கர வாகனமும், ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் ஒரு கனரக வாகனம் மற்றும் 7 நான்கு சக்கர வாகனங்கள் மீதும் என மொத்தம் 2 கனரக வாகனங்கள், 7 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 19 வாகனங்கள் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி உட்கோட்டத்தில் 7 இடங் களிலும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 7, திருச் செந்தூர் உட்கோட்டத் தில் 6, ஸ்ரீவைகுண்டம் உட்கோட் டத்தில் 7, மணியாச்சி உட்கோட்டத்தில் 6, கோவில் பட்டி உட்கோட்டத்தில் 9, விளாத்திகுளம் உட்கோட் டத்தில் 9 மற்றும் சாத்தான் குளம் உட்கோட்டத்தில் 6 இடங்கள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 57 இடங்களில் 8 டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வை யில் 8 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 68 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 160 போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனையில் போதைப் பொருள் கடத்தல், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News