கள்ளக்குறிச்சி அருகே சாராயம் கடத்திய கும்பலை மடக்கி பிடித்த போலீசார்
- போலீசாருக்கு பைத்தந்துரை ஏரிக்கரையில் சாராயம் கடத்தி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- பைத்தந்துறை ஏரிகரை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 5 நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு பைத்தந்துரை ஏரிக்கரையில் சாராயம் கடத்தி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரணேஸ்வரி உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது பைத்தந்துறை ஏரிகரை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 5 நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
அவர்களில் 3 பேரை போலீசார் துரத்திப் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை செய்ததில் சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை(வயது 33), வெற்றி(27), மற்றும் வாணியந்தல் கிராமத்தை சேர்ந்த பழனிவேல்(42), என்பதும் தப்பி ஓடியவர்கள் விஜயராஜ், ராஜிவ்காந்தி என்பதும் தெரிய வந்தது மேலும் இவர்கள் மோட்டார் சைக்கிளில் 5 கேன்களில் எரிசாராயம் மற்றும் 200 கிராம் கஞ்சாவும் விற்பனைக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. உடனே போலீசார் சின்னதுரை, வெற்றி, பழனியை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 105 லிட்டர் எரிசாராயம் 200 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் தப்பி ஓடிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.