உள்ளூர் செய்திகள்

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகளை படத்தில் காணலாம்.

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க சென்னைக்கு புறப்பட்ட திண்டிவனம் விவசாயிகளை தடுத்த போலீசார் : திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-10-10 07:18 GMT   |   Update On 2023-10-10 07:18 GMT
  • சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
  • இதனையடுத்து விவசாயிகள் வா க்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்:

காவிரியில் நீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவாக சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வ தற்காக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை நோக்கி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பம் பகுதியில் விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார், சென்னைக்கு செல்ல அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனை யடுத்து விவசாயிகள் வா க்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இருந்தபோதும் போலீசார் அனுமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கரும்பு மற்றும் நெற்பயிர்களை கையில் பிடித்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியல் ஈடுபட்ட விவசா யிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், சென்னை போராட்ட த்திற்கு செல்ல அனுமதி அளித்த னர். தொடர்ந்து விவசாயி கள் தங்கள் மறியலை கைவி ட்டனர். விவசாயி களின் இந்த மறியல் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சா லையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News