பொள்ளாச்சி இளைஞர் 34,000 கி.மீ. சைக்கிள் பயணம்
- ஆந்திரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், காஷ்மீர், பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களை சைக்கிளில் கடந்து, கேரளா செல்லும் வழியில் நேற்று ஓசூர் வந்தார்.
- அவருக்கு, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஓசூர்,
பொள்ளாச்சியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் முத்துசெல்வன்(26) எம்.பி.ஏ.பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
சைக்கிள் மூலம் 34,300 கிமீ தூரம் பயணித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக கடந்த 2021- ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கினார். ஆந்திரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம்,காஷ்மீர், பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களை சைக்கிளில் கடந்து, கேரளா செல்லும் வழியில் நேற்று ஓசூர் வந்தார். அவருக்கு, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர், முத்துசெல்வன் கூறுகையில்:-
தான் இதுவரை 18,000 கிமீ தூரம் பயணித்திருப்பதாகவும், வருகிற 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் பயணத்தை முடிக்க உள்ளதாகவும் கூறினார்.
மேலும் அவர், கியர் இல்லாத சாதாரண சைக்கிளில் 120 கிலோ எடையிலான பொருட்களுடன் பயணிப்பதாகவும், தானே சமைத்து சாப்பிட்டு, பெட்ரோல் நிலையம், காவல்நிலையங்களில் இரவு நேரங்களில் தங்குவதாகவும் தெரிவித்தார்.