உள்ளூர் செய்திகள்

ஆத்தூர் பகுதியில் தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கறிவேப்பிலை செடிகள்.

ஆத்தூர் பகுதியில் கறிவேப்பிலை வரலாறு காணாத விலை உயர்வு

Published On 2023-01-08 09:00 GMT   |   Update On 2023-01-08 09:00 GMT
  • விளைச்சலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக கறிவேப்பிலை இலவசமாக வழங்குவதில்லை.
  • விலை உயர்வு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆத்தூர்:

கறிவேப்பிலை அன்றாட சமையல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இதனால் கிராமப்புறங்களில் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்கும்போது கறிவேப்பிலை இலவசமாக கொடுப்பது வழக்கமாக இருந்தது.

ஆனால் தற்பொழுது விளைச்சலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக கறிவேப்பிலை இலவசமாக வழங்குவதில்லை.

சேலம் மாவட்டம், ஆத்தூர், தலைவாசல், ஆறுகளூர், சுற்றுவட்டார பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கறிவேப்பிலை விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் கறிவேப்பிலை சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது .

தற்பொழுது கார்த்திகை, மார்கழி, மாதங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக கறிவேப்பிலை செடிகளில் அஸ்வினி, செம்பேன், போன்ற நோய் தாக்குதல் அதிகமாக உள்ளதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ கறிவேப்பிலை 30 ரூபாய்க்கு விற்பனையானது. தற்பொழுது 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது. இதனால் வியாபாரிகள் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.

இலவசமாக கொடுத்து வந்த கறிவேப்பிலை இன்று 100 ரூபாயை எட்டியது விவசாயிகளிடையே, வியாபாரிகளிடையே பொதுமக்களிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News