உள்ளூர் செய்திகள்

அரசு ஊழியர்களின் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்-எடப்பாடி பழனிசாமி

Published On 2024-05-31 10:34 GMT   |   Update On 2024-05-31 10:34 GMT
  • ‘எம்மீஸ்’ தளத்தில் பதிவேற்ற கட்டாயப்படுத்துகிறது.
  • மாணவர்களுக்கு கற்பிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மாணவர்கள் பற்றிய விவரங்களையும், வருகைப் பதிவேட்டையும் 'எம்மீஸ்' தளத்தில் பதிவேற்ற கட்டாயப்படுத்துகிறது.

இதனால், ஆசிரியர்கள் தினமும் காலை, மாணவர்களின் வருகைப் பதிவேட்டை 'எம்மீஸ்' தளத்தில் பதிவேற்றுதிலேயே நேரம் போத வில்லை என்றும், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் நேரத்தைவிட, தங்களது கைப்பேசி இருக்கும் நேரம் அதிகமாகி விட்டதாக ஆசிரியர்கள் இந்த அரசை குற்றம் சாட்டுகிறார்கள்.

ஒருசில நேரங்களில் 'இன்டர்நெட் இணைப்பு' கிடைக்காமல் 'செல்போனில் எம்மீஸ் தளம் சுற்றிக் கொண்டிருப் பதையே' 'கடவுளைப் பார்ப்பது போல்' பயபக்தியுடன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், மாணவர்களுக்கு கற்பிக்க முடியாத நிலை ஏற்படுவதாக வும் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், காவல் துறையில் பணிபுரியும் காவ லர்களை ஆளும் கட்சி நிர்வாகிகள் மிரட்டுவதும், வருவாய்த்துறை ஊழியர்கள் மீது மணல் திருட்டு கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்துவதும் என்று, அனைத்து அரசுத் துறைகளை சேர்ந்த ஊழியர் களும் ஏதேனும் ஒரு வகையில் இந்த தி.மு.க. ஆட்சியில் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

காலிப்பணியிடங்கள் அனைத்துத் துறைகளிலும் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கைத்தறி ஊழியர்கள் சங்கம், போக்குவரத்து ஊழியர் சங்கங்கள், மருத்துவர் பணியாளர் சங்கங்கள், ஆசிரியர் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர் சங்கங்களையும் அழைத்துப் பேசி, அவர்களுடைய குறைகளை உடனடியாக களையவும், தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், தி.மு.க. அரசின் முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News