தூய்மையான குடிநீரை வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம்
- சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடமும் பலமுறை மனுக்களும் தொலைபேசி வாயிலாகவும் தகவல் தெரிவித்துள்ளனர் .
- செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் அறிவித்தனர்.
கடலூர்:
புவனகிரி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 13 ,14, 15, 16, 17 ஆகிய வார்டுகளில் குடிநீர் உப்பு நீராக மாறி மக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்து கொடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்திடமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடமும் பலமுறை மனுக்களும் தொலைபேசி வாயிலாகவும் தகவல் தெரிவித்துள்ளனர் .
ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புவனகிரி- விருத்தாச்சலம் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ,மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் அறிவித்தனர்.
அதன்படி இன்று சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது.இதனை அறிந்த புவனகிரி தாசில்தார் அன்பழகன், டிஎஸ்.பி. நாகராஜ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், செயலாளர் (பொறுப்பு) திருமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தி விரைவில் நல்ல குடிநீர் தருகிறோம் என்று கூறினர். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.