கூடலூரில் மின் இணைப்பு வழங்க கோரி பொதுமக்கள் தர்ணா
- பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
- வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூரில் எம்.ஜி.ஆர். நகர் பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கூடலூா் எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் குடியிருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-
கூடலூா் நகராட்சியில் உள்ள எம்.ஜி.ஆா்.நகரில் நாங்கள் கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக குடியி ருந்து வருகி றோம். நாங்கள் நகராட் சிக்கு தொடா்ந்து வரி செலுத்தி வருகிறோம். குடியி ருக்கும் முகவரியில் ரேஷன் காா்டு, வாக் காளா் அடையாள அட்டை, ஆதாா் காா்டு வழங்கப் பட்டுள்ளது.
ஆனால் பிரிவு-17 நிலப் பிரச் னையை காரணம் காட்டி இது வரை வீடு களுக்கு மின் இணைப்பு மட்டும் வழங்கப் படவில்லை.
மின் இணைப்பு இல்லா ததால் குழந்தை களின் கல்வி பாதிக்கப் படுகிறது.
விளக்கு களை எரிய வைக்க மண் எண்ணையும் கிடைப் பதில்லை. வீட்டில் விளக்கு எரிக்க டீசலை வாங்கி பயன் படுத்தி வருகிறோம். இதனால் பல்வேறு பிரச் சனைகளை சந்திக்க வேண்டி யுள்ளது.
எனவே, குடியிருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற வலி யுறுத்தி தர் ணாவில் ஈடுபட் டுள்ளோம் என்றனா்.