உள்ளூர் செய்திகள்

மூடப்படாமல் காணப்படும் மழைநீர் வடிகால்.

மழைநீர் வடிகால்களை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

Published On 2022-12-26 07:46 GMT   |   Update On 2022-12-26 07:46 GMT
  • பேரூராட்சி பணியாளர்களால் தோண்டி எடுக்கப்பட்டு மழைநீர் அப்புறப்படுத்த ப்பட்டது.
  • முக்கிய சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் இரண்டு மாதங்களாகியும் சரி செய்யப்படாமல் உள்ளது.

திருத்துறைப்பூண்டி:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட ஆசாத் நகர் பகுதியில் வடிகால் வாய்க்கால் தூர்ந்து போய் இருந்ததால் 5-வது வார்டு பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

பின்பு, பேரூராட்சி பணியாளர்களால் தோண்டி எடுக்கப்பட்டு மழைநீர் அப்புறப்படுத்த ப்பட்டது. அப்போது, சாலையின் சில பகுதியும் தோண்டப்பட்டு பள்ளத்தை சுற்றி 'பேரிகார்டுகள்' வைத்து தற்காலிகமாக தடுப்பு வைக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, அதிகமான கடைகள், மீன் மார்க்கெட், பள்ளிக்கூடங்கள் என எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாக காணப்படும் ஆசாத்நகர் பகுதியின் முக்கிய சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் இரண்டு மாதங்களாகியும் இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் சென்று கோரிக்கை விடுத்தும் பயனில்லை.

எனவே, விபத்துகள் ஏற்படும் முன் மக்களின் நலன் கருதி தோண்டப்பட்ட மழைநீர் வடிகாலை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News