உள்ளூர் செய்திகள்

தஞ்சை அருளாந்த நகர் ஸ்டெம் பூங்கா.

தஞ்சை ஸ்டெம் பூங்காவில் பகல் நேரங்களிலும் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்

Published On 2023-09-09 10:20 GMT   |   Update On 2023-09-09 10:20 GMT
  • தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 ணி வரை மட்டுமே பொதுமக்கள் அனுமதி க்கப்படுகின்றனர்
  • பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை அருளானந்த நகரில் ரூ.11.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பூங்காவை (ஸ்டெம் பூங்கா) கடந்த ஜூலை மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, ஏசி வசதி உடன் தொழில்நுட்ப கோளரங்கம், விண்வெளிக்கு அனுப்பப்படும் ஏவுகணைகளான பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஏவுகணைகள் மாதிரி, 16 வடிவில் ராட்சத டைனோசர் பொம்மைகள் உள்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

இந்நிலையில் இந்த ஸ்டெம் பூங்காவில் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 ணி வரை மட்டுமே பொதுமக்கள் அனுமதி க்கப்படுகின்றனர்.

இதனால் விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகளை பகலிலே அழைத்து வர முடியாமல் பெற்றோர் அவதிப்படுகின்றனர். மேலும் பூங்காவில் உள்ள ஒவ்வொரு அறிவியல் உபகரணங்களையும் விளக்கி கூற போதிய ஆட்கள் இல்லை.

பொதுமக்களாகவே பார்த்து தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

இது தவிர பூங்காவானது முறையாக பராமரிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே பூங்காவுக்குள் அனுமதிக்கப்படும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.

உபகரணங்களை விளக்க ஆட்களை நியமித்து முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News