உள்ளூர் செய்திகள்
- 130 பேர் தங்களுக்கு மகளிர் உரிமை திட்டத்தில் பணம் வரவில்லை.
- அரசூர் மெயின் ரோட்டில் திடீரென மறியல் போராட்டம் நடத்தினர்.
திருவையாறு:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த அரசூர் உள்ளிட்ட பலபகுதிகளில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பணம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலையில் அரசூர் கிராம மக்கள் 80 பெண்கள் உள்பட 130 பேர் தங்களுக்கு மகளிர் உரிமை திட்டத்தில் பணம் ஏறவில்லை என்று கூறி திருவையாறு மணக்கரம்பை சுப்பிரமணியன் கோவில் அருகே அரசூர் மெயின் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் (பொறுப்பு) நெஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.