மணமேல்குடி யூனியன் கூட்டம் - தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் - ஒன்றியகுழு தலைவர் பரணிகார்த்திகேயன் பேச்சு
- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.
- தமிழக முதல்-அமைச்சர் மக்களுக்காக தொடர்ந்து பல நல்லத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனை அதிகாரிகள் உரிய முறையில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திக்கேயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 28 ஊராட்சிகளை சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதி குறைநிறைகளை முன்வைத்து பேசினர். அதற்கு அந்தந்த துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திக்கேயன் பேசுகையில்,
தமிழக முதல்-அமைச்சர் மக்களுக்காக தொடர்ந்து பல நல்லத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனை அதிகாரிகள் உரிய முறையில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும், உள்ளாட்சி பிரதிநிதிகளால்தான் மக்களை எளிதில் சந்தித்து அவர்களின் குறைகளை கண்டறிய முடியும். அந்த வகையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக அரசின் பல நல்ல திட்டங்களை மக்களிடையே எடுத்துச் சென்று உதவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் ஒன்றியக்குழு துணை தலைவர் சீனியார் உள்ளிட்ட உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.