உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி அருகே ஏ.சி. ஸ்மார்ட் கிளாஸ் வசதிகளுடன் அரசு தொடக்கப் பள்ளி

Published On 2023-07-06 07:48 GMT   |   Update On 2023-07-06 07:48 GMT
  • பள்ளியில் தற்போது 28 மாணவர்கள் படித்து வருகின்றனர்
  • ரூ.10 லட்சத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட பள்ளியாக மேம்படு த்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஏ.சி.ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடன் அரசு தொடக்கப்பள்ளியை மேம்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் புதுக்கோட்டை விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மேம்படுத்தும் பணியில் ஊர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இரு வகு ப்பறைகளைக் கொண்ட கட்டிடத்தில் வண்ணம் தீட்டப்பட்டது. புதிய வயரிங், பால் சீலிங் அமைக்கப்பட்டது. மேலும் கதவு மற்றும் ஜன்னல் பகுதிக்கு கண்ணாடி கதவு பொருத்தப்பட்டது.

கரும்பலகையை அகற்றி விட்டு வெள்ளை நிற பலகை பொருத்தப்பட்டது. மேலும் நமக்கு நாமே திட்டத்தில் இருந்து தரை தளத்தில் டைல்ஸ் பதிக்கப்பட்டது. அதே திட்டத்தில் இரு வகுப்பறைகளுக்கும் தொடுதிரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்தப்பட்டது. மேலும் அங்கு பணி புரியும் தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரி யர் சார்பில் இரு வகுப்பறை களுக்கும் ஏ.சி.வசதி ஏற்படு த்தப்பட்டுள்ளது. மின்த டையில்லா நிலையை உருவாக்குவதற்காக இன்வெர்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

இதன் மூலம் ரூ.10 லட்சத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட பள்ளியாக மேம்படு த்தப்பட்டு வருகிறது. இது குறித்து புது க்கோட்டை விடுதி பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பம் கூறியது:- பள்ளியில் தற்போது 28 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஊர் மக்க ளின் முயற்சியால் சகல வசதிகளுடன் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட பள்ளியாக மேம்ப டுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள ஒரிரு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற உள்ளது என்றார்.

Tags:    

Similar News