பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்க அதிரடி கவனம் செலுத்தப்படும் - போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பேட்டி
- சிவகாசியில் கூடுதல் எஸ்பியாக பணியாற்ற தொடங்கியவர் அதன்பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றியுள்ளார்.
- எந்நேரமும் எந்தவித தகவல் என்றாலும் தொடர்பு கொள்ள தனது செல் நம்பரை வெளியிட்டுள்ளார் 94899 46674. குற்றங்களை தடுக்க தனிப்படை அமைக்கப்படும் என்றார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டாக இருந்த நிஷாபார்த்திபன் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டதால் புதுக்கோட்டைக்கு வந்திதா பாண்டே நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டாக பதவியேற்றுக் கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- நான் உத்தரபிரசேத மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர். 2011 ஆண்டு பேட்ஜில் படித்து முடித்தவர். சிவகாசியில் கூடுதல் எஸ்பியாக பணியாற்ற தொடங்கியவர் அதன்பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றியுள்ளார்.
அதன்பின்னர் கரூர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் பட்டாலியன் படையில் பணியாற்றிவிட்டு தற்போது மீண்டும் எஸ்பியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியில் சேர்ந்துள்ளேன் என்றார்.
சட்டம் ஒழுங்கை திறம்பட கையாளுவேன். அதைவிட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்களை முழுமையாக குறைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். எந்நேரமும் எந்தவித தகவல் என்றாலும் தொடர்பு கொள்ள தனது செல் நம்பரை வெளியிட்டுள்ளார் 94899 46674. குற்றங்களை தடுக்க தனிப்படை அமைக்கப்படும் என்றார்.