புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளி வாகனங்களும் ஒரே நாளில் ஆய்வு-கலெக்டர் தலைமையில் 26-ந்தேதி நடைபெறுகிறது
- கலெக்டர் தலைமையில் 26-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளி வாகனங்களும் ஒரே நாளில் ஆய்வு மேற்கொள்ளபட உள்ளது
- இந்த ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்களின் அனுமதிச் சீட்டினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்மூலம் தெரிவி க்கப்படுகிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் வாகனங்களும், ஒரே நாளில் ஒரே இடத்தில், மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு, மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட உள்ளன.
எனவே, ஆய்விற்கு கொண்டு வரப்படும் வாகனங்களோடு, பதிவுச்சான்று, காப்புச்சான்று, அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், ஊர்தி இயக்கப்பதிவேடு, நடப்பில் உள்ள முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி ஆகியவற்றுடன், ஓட்டுநர் பெயர்வில்லை பொருத்திய உரிய சீருடையுடன் வரவேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி உரிமை யாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இந்த ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்களின் அனுமதிச் சீட்டினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்மூலம் தெரிவி க்கப்படுகிறது என்று அதில் தெரிவித்துள்ளார்.