உள்ளூர் செய்திகள்

வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பு விடுத்த பா.ஜ.க.வினர்

Published On 2023-11-01 07:22 GMT   |   Update On 2023-11-01 07:22 GMT
  • அண்ணாமலையின் யாத்திரையில் பங்கேற்க பா.ஜ.கவினர் வெற்றிலை, பாக்கு வைத்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்
  • மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்று அசத்தல்

புதுக்கோட்டை,

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண்-என் மக்கள் என்ற பாதயாத்திரை நடத்தி வருகிறார். வருகிற 6-ந்தேதி அவர் புதுக்கோட்டையில் நடைபயணம் மேற்கொள்கிறார். இதில் திரளானோரை பங்கேற்க செய்வதற்கு ப.ஜ.க.வினர் விரிவான ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.இதன் ஒரு கட்டமாக பா.ஜ.க.வினர் நூதன முறையில் அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர். புதுக்கோட்டை கீழ 3-ம்வீதி வரதராஜ பெருமாள் கோவிலில் மகளிர் குழு உறுப்பினர்களுக்குவழங்கும் நிகழ்ச்சி பா.ஜ.க. மாவட்ட பொதுசெயலாளரும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி யாத்திரை பொறுப்பாளருமான ஏ.வி.சி.சி. கணேசன் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர்கள் லெட்சுமணன், சக்திவேல் முன்னிலை வகித்தார்.இதில் உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் ரவிக்குமார், அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாவட்ட தலைவர் மனோகர்,ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், சக்திகேந்திர கூடுதல் பொறுப்பாளர் கைலாஷ், நகர நிர்வாகிகள் ஆனந்த்,செந்தில்குமார், ரங்கநாதன்,இளங்கோ, சுப்பிரமணியன்,கண்ணன், ராஜேந்திரன்,ரஜினி,ரவி, சாய்லெட்சுமி,கிளைத் தலைவர்கள் மற்றும் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.அப்போது அண்ணாமலை அழைக்கிறார் என்ற பதாதையுடன் புதுக்கோட்டை நகர வீதிகளில் மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று,வீடு தோறும் மங்களகரமான பொருட்களை வழங்கி அழைப்பு விடுத்தனர்.நாதஸ்வரம் ஒலிக்க, வெற்றிலை-பாக்கு பூ,சந்தனம், குங்குமம், மஞ்சள் கயிறு, ஜாக்கெட் துணி ஆகியவற்றை தட்டில் வைத்து, சொந்த குடும்ப விசேஷத்திற்கு அழைப்பது போன்று நூதன முறையில் அழைப்பு கொடுத்தார்கள். இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

Tags:    

Similar News