உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை தேரோடும் வீதியில் புதைவட கம்பி பயன்பாட்டுக்கு வந்தது

Published On 2023-10-29 07:45 GMT   |   Update On 2023-10-29 07:45 GMT
  • புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் ரத வீதியில் பூமிக்குள் புதைக்கப்பட்ட மின்கம்பி பயன்பாட்டுக்கு வந்தது
  • அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சி, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோடும் வீதியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பில், மின்கம்பிகளை அகற்றி ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புதைவட கம்பி அமைக்கப்பட்டுள்ளதை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-

தமிழக அரசு தமிழகம் முழுவதும் தேரோடும் வீதிகளில் மின்கம்பிகளை அகற்றி புதைவட கம்பி அமைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவில் தேர் திருவிழா நாளன்று தேர் செல்லும் போது எவ்வித மின்சார இடையூறுமின்றி தேர் செல்வதற்கு வழிவகை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இந்துசமய அறநிலையத்துறை சார்பில், திருவப்பூர் ஈஸ்வரன் திருக்கோவில் திருப்பணிக்காக ரூ.98 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய சிறப்பு வழிபாடு நிகழ்வில், சட்டத்துறை அமைச்சர் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ செல்வி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர் மன்றத் துணைத்தலைவர்லியாகத் அலி, செயற்பொறியாளர் முருகன், உதவி செயற்பொறியாளர், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் தவபாஞ்சாலன், உதவி மின்பொறியாளர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், வட்டாட்சியர் கவியரசன், நகர்மன்ற கவுன்சிலர் கனகம்மன் பாபு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News