உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் போக்குவரத்திற்கு இடையூராக சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை அகற்ற வேண்டும் - ஒன்றிய குழுகூட்டத்தில் வலியுறுத்தல்

Published On 2022-09-10 06:38 GMT   |   Update On 2022-09-10 06:38 GMT
  • கந்தர்வகோட்டை பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள், நாய்கள் மற்றும் தெருக்களில் சுகாதாரக் கேட்டை உண்டாக்கும் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • கந்தர்வகோட்டையில் காலை மாலை நேரங்களில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் நலன் கருதி பேருந்துகளை இயக்கவும்நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக்மழவராயர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில்கந்தர்வகோட்டை பேருந்து நிலைய பணிகளை உடனே தொடங்கவும், கந்தர்வகோட்டை பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள், நாய்கள் மற்றும் தெருக்களில் சுகாதாரக் கேட்டை உண்டாக்கும் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவும்,

தொடர் மழையால்நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், காலை மாலை நேரங்களில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் நலன் கருதி பேருந்துகளை இயக்கவும்நடவடிக்கை எடுக்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டத்தில் துணைத் தலைவர் செந்தாமரை குமார், உறுப்பினர்கள் பாண்டியன், ராஜேந்திரன், கலியபெருமாள், திருப்பதி, முருகேசன், பாரதி பிரியா, மலர், சுதா, பரிமளா, நதியா, வைரக்கண்ணு, கோவிந்தராஜ்மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News