உள்ளூர் செய்திகள்

சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் சரக்கு ரெயிலில் வந்தது

Published On 2023-10-09 09:01 GMT   |   Update On 2023-10-09 09:01 GMT
  • புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சம்பா சாகுபடிக்கு தேவையான 1288.85 மெட்ரிக் டன் உரங்கள், தூத்துக்குடியில் இருந்து சரக்கு இரயிலில் வந்தது
  • மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் பயன்படும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டது

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் 1288.85 மெட்ரிக் டன்கள் துாத்துக்குடியில் இருந்து சரக்கு இரயிலில் புதுக்கோட்டை வந்தடைந்தது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். எனவே, சம்பா சாகுபடிக்கும் , ஏற்கனவே, பயிரிட்டுள்ள மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, தென்னை, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் ஆகிய பயிர்களுக்கும் தேவையான உரங்கள் யூரியா 4498 மெட்ரிக் டன்கள், டிஏபி 1513 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 1564 மெட்ரிக் டன்கள், காம்ப்ளக்ஸ் 5291 மெட்ரிக் டன்கள் ஆகிய உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா உரம் 784.35 மெட்ரிக் டன்களும், டிஏபி உரம் 252.25 மெட்ரிக் டன்களும்,  காம்ப்ளக்ஸ் உரம் 252.25 மெட்ரிக் டன்களும், துாத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திலிருந்து  சரக்கு இரயில் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரப்பெற்றது. இந்த உரங்கள், மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் பயன்படும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News