புதுக்கோட்டையில் - ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்
- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், செய ல்படுத்தப்படும் திட்ட ங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.
- வளர்ச்சித் திட்டங்களை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறு த்தப்பட்டது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், செய ல்படுத்தப்படும் திட்ட ங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்த தாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் கிராமப்பு றங்களில் அடிப்ப டை கட்ட மைப்பு வசதிகளை மேம்ப டுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை யின் சார்பில், செயல்படு த்தப்படும் திட்ட ங்கள் குறித்த ஆய்வுக் கூட்ட ம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் திட்டம், பாரத பிரதமரின் கிஸான் சம்மான் நிதித் திட்டம், ஜல் ஜீவன் மிசன், மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பா டுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.
மேலும் வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவடி க்கையாக ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், அரசு கட்டிட ங்கள் உள்ளிட்ட வைகளை கண்கா ணித்து சேதமடை ந்துள்ள கட்டிடங்களை பாதுகா ப்பாக இடித்து அப்புறப்ப டுத்திட உரிய நடவ டிக்கை கள் மேற்கொ ள்ளுமாறு தொடர்புடைய அலுவ லர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டது.
மேற்கண்ட வளர்ச்சித் திட்டங்களை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறு த்தப்பட்டது என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர் ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பி ரியா, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவல ர்கள் மற்றும் அரசு அலுவ லர்கள் பலர் கலந்துகொ ண்டனர்.