உள்ளூர் செய்திகள் (District)

கந்தர்வகோட்டை அருகே மகா கணபதி கோவிலில் கும்பாபிஷேகம்

Published On 2023-02-09 07:31 GMT   |   Update On 2023-02-09 07:31 GMT
  • கந்தர்வகோட்டை அருகே மகா கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
  • விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

கந்தர்வகோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுநகர் கிராமத்தில் ஸ்ரீ மகா கணபதி, பூர்ண புஷ்பகலா சமேத ஐயனார், ஆனையடிகருப்பர், முத்தையன், பேச்சியம்மாள், ஆகாய கருப்பர், சப்பானி கருப்பர், பாப்பாத்தி அம்மன், மதுரை வீரன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைத்து நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.

பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நீர் கலசங்களில் வைத்து கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து கோவில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் புது நகர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Tags:    

Similar News