உள்ளூர் செய்திகள்

நாட்டாணி கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-05-05 06:19 GMT   |   Update On 2023-05-05 06:19 GMT
  • கடந்த 2-ந் தேதி முதல் விழா தொடங்கியது.
  • நாட்டாணி கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

புதுக்கோட்டை:

மணமேல்குடி தாலுகா நாட்டாணி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ நந்தனவிநாயகர், ஸ்ரீ பூரணபுஷ் அம்பிகை சமேத ஸ்ரீ சதுரமுடைய அய்யனார் கோவிலில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.அதன்படி யாகசாலை அமைத்து கணபதி ஹோமத்துடன் கடந்த 2-ந் தேதி முதல் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 4கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கண்ணன் சாஸ்திரிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News