உள்ளூர் செய்திகள்

உள்ளாட்சி அமைப்புகள் இடைத் தேர்தல் முடிவுகள்

Published On 2022-07-13 06:42 GMT   |   Update On 2022-07-13 06:42 GMT
  • உள்ளாட்சி அமைப்புகள் இடைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
  • போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட த்தில் தேர்தல் நடைபெற்ற 7 உள்ளாட்சிப் பதவிகளுக்கு புதுக்கோட்டை, அறந்தாங்கி, அரிமளம், அன்னவாசல் ஆகிய ஊராட்சி ஒன்றி யங்களில் வாக்குகள் எண்ண ப்பட்டன. இதில் மாவட்ட ஊராட்சிக்குழு 7-வது வார்டில் தி.மு.க.வைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. வசம் இருந்த இடத்தை இடைத்தேர்தலில் தி.மு.க. கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வெட்டுகாடு (பொது) ஊராட்சி மன்ற தலைவராக ஆரோக்கியசாமி வெற்றி பெற்றார். அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் மேலப்பட்டு (பொது) ஊராட்சி மன்ற தலைவராக அயூப்கான் வெற்றி பெற்றார். அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் நெடுங்குடி(பொது) ஊராட்சி மன்ற தலைவராக வெள்ளைச்சாமி வெற்றி பெற்றார். குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் தென்னங்குடி(பொது) ஊராட்சி மன்ற தலைவராக செல்லமணி வெற்றி பெற்றார். புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தொண்டமான் ஊரணி (பொது) ஊராட்சி மன்ற தலைவராக தாமரைச்செல்வி வெற்றி பெற்றார். கல்லூர் கிராம ஊராட்சி வார்டு எண் 6க்கு பூமதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செங்கீரை கிராம ஊராட்சியில் வார்டு எண் 5க்கு சாத்தையா வெற்றி பெற்றார். மிரட்டுநிலை கிராம ஊராட்சிக்கு வார்டு எண் 1க்கு பாண்டிசெல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வன்னியம்பட்டி கிராம ஊராட்சி வார்டு எண் 1க்கு சின்னப்பொண்ணு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்

Tags:    

Similar News