சமதள நிலத்தில் மிளகு சாகுபடி-புதுச்சேரி அமைச்சர் ஜெயகுமார் நேரில் பார்வையிட்டார்
- சமதள நிலத்தில் சாகுபடி செய்த மிளகை புதுச்சேரி அமைச்சர் ஜெயகுமார் நேரில் பார்வையிட்டார்
- மலைப்பிரதேச பயிர் எனப்படும் இந்த மிளகு உள்ளிட்ட பயிர்களை வடகாடு பகுதி விவசாயிகள் சமதளத்தில் விளைய வைத்து இருப்பது அசாத்தியமானது.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே சமதள நிலத்தில் மிளகு சாகுபடி நடைபெறுவதை புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஜெயகுமார் நேரில் பார்வையிட்டார்.மலை பிரதேசங்களில் பயிரிடப்படும் மிளகினை ஆலங்குடி பகுதி விவசாயி கள்சமதள பரப்பில் பயிரிட்டு வருகின்றனர். வடகாடு, கொத்தமங்கலம், சேந்த ன்குடி ஆகிய பகுதிகளில் சமதள பரப்பில் மிளகு பயிரிடப்பட்ட மிளகு விவசாயத்தினை, புதுச்சேரி மாநில வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு, இது குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
கொடி மிளகு, செடி மிளகு உள்ளிட்ட மிளகு சாகுபடிகளை பயிரிடப் பட்டு உள்ளதாக அப்பகுதி விவசாயி பால்சாமி அமைச்சரிடம் தெரிவித்தார். இதனை கேட்டறிந்த அமைச்சர் மிளகு செடியினை பெற்றுச்சென்றார்.அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, மலைப்பிரதேச பயிர் எனப்படும் இந்த மிளகு உள்ளிட்ட பயிர்களை வடகாடு பகுதி விவசாயிகள் சமதளத்தில் விளைய வைத்து இருப்பது அசாத்தியமானது.
இது போன்ற விவசாயத்தை புதுச்சேரியின் விவசாயி களுக்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில் தான் அடுத்த மாதம் புதுச்சேரி யில் நடைபெறஉள்ள விவசாயிகள் திருவிழா மற்றும் மலர் கண்காட்சியில் மிளகு விவசாயத்தை சமதளத்தில் சாத்தியமாக்குவதுகுறித்து விவசாயிகளுக்குவிளக்க ப்பட உள்ளதுஇதுகுறித்து அறிந்திட நேரில் வந்து ள்ளேன். புதுச்சேரியில் மிளகு விவசாயத்தில் கள மிறங்கும் விவசாயி களுக்கு அரசு மானியம் வழங்கி ஊக்குவிக்க உள்ளது என்று அவர் தெரிவித்தார்.