புதுக்கோட்டை சிவாலயங்களில் பிரதோஷ விழா
- புதுக்கோட்டை சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது
- நந்திகேஸ்வரர் பகவானுக்கு அக்கினியில் நல்ல மழை வேண்டி தண்ணீர் அபிஷேகம் மகாதீபா ஆராதனை நடைபெற்றது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை வேதநாயகி உடனுறை சாந்தநாத சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு சாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட போன்ற 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. மாலையில், நந்திகேஸ்வரருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீறு உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் நந்திகேஸ்வரர் பகவானுக்கு அக்கினியில் நல்ல மழை வேண்டி தண்ணீர் அபிஷேகம் மகாதீபா ஆராதனை நடைபெற்றது. நந்திகேஸ்வரருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் வருகைதந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டு மன்ற, திருக்கோவில் நிர்வாகிகள், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.இதேபோல், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர், நெடுங்குடி கைலாசநாதர் கோவில், திருவேங்கைவாசல், நற்சாந்துபட்டி, பனையபட்டி, வலையபட்டி ஆகிய சிவன் கோவில்களிலும், பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவில், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர், இலுப்பூர் பகுதியில் உள்ள சொர்ணாம்பிகை சமதே பொன்வாசி நாதர் வௌ்ளாஞ்சார் மீனாட்சிசுந்தேரஸ்வரர், ராப்பூசல் தாயுமானவர், தாண்டீஸ்வரம் சத்குரு சம்ஹாரமூர்த்தி, இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் ஆலத்தூர் தர்மாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் மற்றும் இலுப்பூரை சுற்றியுள்ள பல்வேறு சிவன் கோவில்களில் உள்ள நந்தியம் பகவானுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.