குரங்கு தொல்லையால் அவதியுறும் பொதுமக்கள்
- அன்னவாசல் பகுதியில் குரங்கு தொல்லையால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்
- கூண்டு வைத்து பிடிக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை
புதுக்கோட்டை,
அன்னவாசல் பகுதிகளில் உள்ள புதுத்தெரு 1, 2, 3-ம்வீதி, கோல்டன் நகர், இஸ்மாயில் நகர், குறிஞ்சி நகர், உப்புகாரத்தெரு, பள்ளிவாசல் தெரு, பழைய கடைவீதி உள்ளிட்ட குடியிருப்புகளில் சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக உணவு பொருட்களுடன் செல்லும் சிறுவர்களை குரங்குகள் விரட்டி சென்று உணவு பொருட்களை பிடுங்கி விடுகின்றன. மேலும், வீட்டின் உள்ளே புகுந்து பொருட்களை உடைத்து நாசம் செய்கிறது. காய்கறிகள், துணிகளை எடுத்துக்கொண்டு ஓடி விடுகின்றன. இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அச்சத்துடன் வீடுகளில் முடங்கி உள்ளனர். குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, அன்னவாசல் பேரூராட்சி நிர்வாகத்தினர் இப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.