உள்ளூர் செய்திகள்

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன் கருத்து கேட்டிருக்க வேண்டும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

Published On 2023-05-21 04:15 GMT   |   Update On 2023-05-21 04:15 GMT
  • பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது.
  • புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் வேதனை

புதுக்கோட்டை,

தமிழ்நாடு நிதித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதுக்கோட்டை அரசு விருந்தினர் மாளிகையான ரோஜா இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- பணமதிப்பிழப்பு நடவடிக்கை முடிவுகளை ரிசர்வ் வங்கி எடுக்கிற போது இதில் சம்பந்தப்பட்ட கருத்துக்களை ஏற்கனவே கேட்டிருக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. மாநில அரசாக இருந்தாலும் பொதுமக்களாக இருந்தாலும் அவர்களிடத்தில் முறைப்படி இது போன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு ரிசர்வ் வங்கி கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும்.பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கும்போது இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. அப்போது தி.மு.க. எதிர்த்து உள்ளது. அதற்கு மாறுபட்ட நடவடிக்கைகளை எடுக்கும் போதும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளாக இருக்கக்கூடிய அனைத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடமும் இது போன்ற விஷயங்களில் கொள்கை முடிவு எடுக்கும்போது கலந்து ஆலோசனை செய்திருந்தால் முறையாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News