திருமயம் ஊராட்சியில் முடிவுற்ற பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
- திருமயம் ஊராட்சியில் முடிவுற்ற பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது
- திருமயம் ஊராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை போக்கும் விதமாக ஊராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் பல்வேறு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை போக்கும் விதமாக ஊராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் பல்வேறு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருமயம் அருகே ஓலை குடிப்பட்டியில் 15-வது நிதிக்குழு மான்யம் 2020-21ல் புதிதாக ரூ.4 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் போர்வெல்லுடன் பைப்லைன் விஸ்தரிப்பு, செங்காடுதியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 980 மீட்டர் பைப் லைன், திருமயம் கடைவீதியில் 91 மீட்டருக்கு ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயையும் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சரண்யா சரவணன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.