உள்ளூர் செய்திகள்

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மதிப்பு தொகை உயர்த்தி தர வேண்டும்

Published On 2023-03-21 07:32 GMT   |   Update On 2023-03-21 07:32 GMT
  • மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு
  • காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் குளத்தூர் தாலுகா மண்டையூர் கீழமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் எங்கள் பகுதியில் விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு வழங்கப்படும் மதிப்பு தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும். அல்லது எடுக்கப்பட்ட இடத்திற்கு ஏற்ப மாற்று இடம் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். நரிமேடு பகுதி அடுக்குமாடி குடியிருப்பை சோ்ந்த குடியிருப்புவாசிகள் அளித்த மனுவில், குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு தண்ணீர் ஏற்றுவதை தனிநபர்கள் மூலம் நிறுத்தப்படுகிறது. இதனால் தண்ணீர் இல்லாமல் அவதி அடைகிறோம். தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். சத்தியமங்கலம் ஊாராட்சி சனையப்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் குழுமிமடை தூர்த்து போய் உள்ளது. இதனை பருவமழைக்கு முன்னதாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சார்லஸ் மனு அளித்தார்.


Tags:    

Similar News