மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இய க்குநர் பெரியசாமி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உற்பத்தியைப் பெருக்கும் தொழில் நுட்பங்களாகிய விதை நேர்த்தி, விதைப்பு முறை, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள், நுண்ணீர் பாசனமுறை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முதலான மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்து உயர் விளைச்சல் பெறும் உழவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், பிற விவசாயிகளும் இவற்றைப் பின்பற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டு, மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை நகல், பயிரிடப்பட்டுள்ள பரப்பின் சான்றாக சிட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களுடன், உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து, நுழைவு கட்டணமாக ரூ.150 மட்டும் அரசுக் கணக்கில் செலுத்தி, தங்கள் வட்டார உதவி வேளாண்மை இயக்குநரிடம் உத்தேச அறுவடை தேதிக்கு 30 நாட்கள் முன்னதாக சமர்பிக்க வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் விவசாயி அறுவடை தேதியைத் தொடர்புடைய வேளாண்மை உதவி இயக்குநரிடம் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.