உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் வீடுகளில் இருந்து கூழைக் கொண்டு வந்து கோவிலில் ஊற்றி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய காட்சி.

தருமபுரி முத்து மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி

Published On 2023-08-30 09:50 GMT   |   Update On 2023-08-30 09:50 GMT
  • அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கூழ் ஊற்றப்பட்டது.
  • மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு அம்மனுக்கு ஆடு பலியிடபட்டது.

தருமபுரி,

தருமபுரி நகர பகுதியில் அமைந்துள்ள வட்டார வளர்ச்சி நகர், உழவர் சந்தை எதிரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 25-ந் தேதி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் கொடியேற்றுதல், மற்றும் பக்தர்களுக்கு கங்கனம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 27-ந் தேதி முனியப்பனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி , சக்தி கரகம் அழைத்தல், பூ மிதித்தல் மற்றும் அம்மன் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வான வேடிக்கையுடன் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வாக இன்று புரோக்கர் ஆபீஸ் மூன்று ரோடு சந்திப்பில் இருந்து கிருஷ்ணகிரி மெயின் ரோடு வழியாக பெண்கள் ஊர்வலமாக கூழ் குடம் எடுத்து கொண்டு முத்துமாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கூழ் ஊற்றப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு அம்மனுக்கு ஆடு பலியிடபட்டது. இந்நிகழ்ச்சியில் நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags:    

Similar News