உள்ளூர் செய்திகள்

விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் காட்சி.

செக்கடி விநாயகர் கோவிலில் புஷ்பாஞ்சலி

Published On 2022-09-01 09:37 GMT   |   Update On 2022-09-01 09:37 GMT
  • புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
  • விநாயகருக்கு பல்வேறு வண்ணமயமான நறுமண பூக்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

செங்கோட்டை:

நாடெங்கிலும் விநாயகர் சதுர்த்தி விழா மேளதாளங்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.தமிழகத்தில் பல இடங்களில் விநாயகர் திரு உருவ சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு யோகங்கள் ஹோமங்களுடன் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டது. செங்கோட்டை செக்கடி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதன் முக்கிய நிகழ்ச்சியான விநாயகர் சதுர்த்தி விழா காலை 7.00 மணிக்கு கும்பபூஜை ஜபம், ஹோமத்துடன் 25 பொருட்களை கொண்டு நறுமண சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு செக்கடி விநாயகர் பல்வேறு வண்ணமயமான நறுமண பூக்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. தர்மஸம்வர்த்தினி பஜனை மண்டலி சார்பில் பக்தி பாடல்கள் நிகழ்த்தபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தர் பட்டர் செய்திருந்தார்.

Tags:    

Similar News