மழைநீர் வடிகால் பணி- ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து மாற்றம்
- ஈ.வெ.ரா சாலையில் சென்டிரல் மற்றும் ஈ.வி.கே. சம்பத் சாலையிலிருந்து காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக எழும்பூர் நோக்கி செல்ல தடை ஏதும் இல்லை.
- எழும்பூர் பகுதி காந்தி இர்வின் மேம்பாலம் சாலையிலிருந்து காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக ஈ.வெ.ரா. சாலை நோக்கி வாகனங்கள் செல்ல இயலாது.
சென்னை:
சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஈ.வெ.ரா சாலையில் காந்தி இர்வின் மேம்பால கீழ்பகுதியில் (வடக்கு) மேம்பால குறுக்கே (காந்தி இர்வின் பாயின்ட் சந்திப்பு) நெடுஞ்சாலைதுறையினர் சாலையில் பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணியில் ஈடுபட உள்ளனர். எனவே 3-ந்தேதி (நாளை) இரவு 10 மணி முதல் வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை இப்பகுதிகளை சுற்றி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஈ.வெ.ரா சாலையில் சென்டிரல் மற்றும் ஈ.வி.கே. சம்பத் சாலையிலிருந்து காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக எழும்பூர் நோக்கி செல்ல தடை ஏதும் இல்லை. எழும்பூர் பகுதி காந்தி இர்வின் மேம்பாலம் சாலையிலிருந்து காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக ஈ.வெ.ரா. சாலை நோக்கி வாகனங்கள் செல்ல இயலாது. அத்தகைய வாகனங்கள் காந்தி இர்வின் மேம்பால டாப் சிக்னல் சந்திப்பிலிருந்து (தாளமுத்து நடராஜர் மாளிகை சந்திப்பு) இடதுபுறம் திரும்பி, காந்தி இர்வின் சாலை, உடுப்பி பாயின்ட் வலதுபுறம் திரும்பி, நாயர் மேம்பாலம் வழியாக ஈ.வெ.ரா. சாலை சந்திப்பில் வலதுபுறம் மற்றும் இடதுபுறம் திரும்பி செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.