உள்ளூர் செய்திகள்

கடலூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடலூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2023-10-19 08:15 GMT   |   Update On 2023-10-19 08:15 GMT
  • மாணவிகள் மழைநீர் சேமிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
  • பல்வேறு பகுதிகளுக்கு சென்று காணொளி வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

கடலூர்:

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்குப்படி தண்ணீரின் முக்கியத்துவம் மற்றும் மழைநீரின் சேகரிப்பு அவசியம் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மழைநீர் சேமிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

மழைநீர் சேகரிப்பு குறித்து பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளுக்கு சென்று காணொளி வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைத்து மழைநீரை சேகரிப்பது, கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், ஊரணிகள் மற்றும் பழைமை வாய்ந்த நீராதார கட்டமைப்புகளை தூர்வாரி மழைநீரை சேகரிப்பதன் மூலம் நிலத்தடி நீரை மேம்படுத்தலாம் என தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் அருளானந்தன் , உதவி நிர்வாகப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், துணை நிலநீர் வல்லுநர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News