உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பட்டியலின மக்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும்: மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2023-07-01 08:02 GMT   |   Update On 2023-07-01 08:02 GMT
  • வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
  • மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு குறித்தும், விவாதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2-ம் காலாண்டிற்கான ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடி யினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது,

மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, தவறுடையதாக கருதப்படும் வழக்குகளின் விசாரனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தற்போது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நிலுவையிலுள்ள வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத வழக்குகள், நீதிமன்ற விசா ரணை நிலுவை வழக்குகள், பிழையுடையதாக கருதப்பட்ட வழக்குகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு விவாதிக்கப்பட்டது. அனைத்து வழக்குகளின் மீதும் விசாரணைகள் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், வன்கொடு மையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவிகள் வழங்கப்பட்ட விவரங்கள் குறித்தும், ஆதிதிராவிட மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது தொடர்பாகவும், மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு குறித்தும், விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் வன்கொடுமை அதிக அளவில் நடைபெறும் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்திடுமாறும், பட்டியலின மக்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நடவடி க்கைகள் மேற்கொள்ளவும், இக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியதன்படி, நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்பு டைய அலுவலர்கள், காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, துணை காவல் கண்காணிப்பாளர்கள் ரமேஷ், மனோஜ்குமார், மகேஷ் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News