ராஜபாளையம்-புளியரை நான்கு வழிச்சாலைப் பணியை விரைவுபடுத்த வேண்டும்- த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா பேட்டி
- தமிழக அரசு விவசாயிகளுக்கான நகைக்கடனை முறையாக தள்ளுபடி செய்யவில்லை.
- ராஜபாளையம்-புளியரை நான்கு வழிச்சாலைப் பணியை விரைவு படுத்த வேண்டும்.
கடையநல்லூர்:
தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் யுவராஜா கடையநல்லூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசியக்கொடி
தி.மு.க. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கான நகைக்கடனை முறையாக தள்ளுபடி செய்யவில்லை. ஏமாற்றத்தை மட்டுமே மக்களுக்கு கொடுத்து வருகிறது.குற்றாலம்
மதுரையில் நடைபெற்ற சம்பவம் தவறானதுதான். ஆனால் அதே நேரம் அநாகரீக அரசியலுக்கு வித்திட்டது தி.மு.க.தான். குற்றாலத்திற்கு இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.
குற்றாலம் மலையின் மேல்பகுதியில் அணை கட்டி வருடம்தோறும் தண்ணீர் விழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் கல்லூரி
ராஜபாளையம்-புளியரை நான்கு வழிச்சாலைப் பணியை விரைவு படுத்த வேண்டும். தென்காசி மாவட்டத்தில் வேளாண் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை கொண்டு வர வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மின்வேலி அமைத்து விவசாய நிலங்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். செண்பகவல்லி அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்ப–ட்டுள்ளது. காவல்துறைக்கு பணிச்சுமை அதி கரித்துள்ளது. தமிழகத்தில் விளம்பர ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வுடன் எங்கள் கூட்டணி தொடர்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தென்காசி மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் அய்யாத்துரை, மாநில இளைஞரணி துணைத் தலைவர் கார்த்தி, நகர த.மா.கா. தலைவர் மக்தும், இளைஞரணி தலைவர் பூமாரியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.