உள்ளூர் செய்திகள்

மன்னாா் வளைகுடா கடலில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 16 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

16 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

Published On 2023-06-24 08:18 GMT   |   Update On 2023-06-24 08:18 GMT
  • இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
  • மூத்த விஞ்ஞானி ஜான்சன், மீனவா் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள மரைக்காயர் பட்டணம் பகுதியில் மத்திய அரசின், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீனவா்க ளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பச்சை வரி இறால்கள் உற்பத்தி செய்யப்பட்டு கடலில் விடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத் தலைவா் தமிழ்மணி தலைமையில் அலுவலர்கள் 16லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகளை படகில் எடுத்துச் சென்று மன்னாா் வளைகுடா கடலில் விட்டனர்.

இதுவரை சுமார் 5.80 கோடி பச்சை வரி இறால்கள் கடலில் விடப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிகழ்ச்சியில் மூத்த விஞ்ஞாடினி ஜான்சன், மீனவா் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News