- ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- இவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக் கப்படுவார்கள்.
ராமநாதபுரம்
பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி தியாகி இமானு வேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்ப டுவதையொட்டி பாது காப்பு பணியில் 8 ஆயி ரம் போலீசார் ஈடுபடுத் தப்பட உள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானு வேல் சேகரன் நினைவு தினம் நாளை மறுநாள் (11- ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியையொட்டி மாவட்டம் முழுவதும் விரி வான பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 3 போலீஸ் டி.ஐ.ஜி.க்கள், 25 போலீஸ் சூப்பிரண்டுகள், 30 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 70 துணை சூப்பிரண்டுகள் மற்றும் உ களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடும் என்று கண்டறியப் பட்ட 166 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் தடையை மீறி யாரும் வாகனங்களில் செல்லவோ, வரவோ கூடாது. இதனை மீறி சென்றால் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விழா நடைபெறும் பகுதி உள்ளிட்ட பரமக்குடி முழுவதும் 200 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மாவட்டம் முழுவதும் 67 இடங்களில் வீடியோ காமிரா மூலம் வாகனங்க ளில் வருபவர்கள், வாக னங்களில் இருப்பவர்கள் பதிவு செய்து கண்கா ணிக்கப்பட உள்ளனர். நினைவிடத்திற்கு எக் காரணம் கொண்டு யாரும் இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது. இதனை மீறி யாராவது வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடந்த காலங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட வர்கள் என கண்டறியப்பட்ட 350 பேர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஓராண்டுக்கு குற்ற செயலில் ஈடுபடமாட் டோம் என்ற உறுதிமொழி பிணைய பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக் கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.