உள்ளூர் செய்திகள்

கூண்டுகளில் அடைத்து வைத்து பச்சைக்கிளி வளர்த்தால் நடவடிக்கை

Published On 2023-07-04 06:56 GMT   |   Update On 2023-07-04 06:56 GMT
  • கூண்டுகளில் அடைத்து வைத்து பச்சைக்கிளி வளர்த்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ராமநாதபுரம் வன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்

வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி பச்சைக்கிளி, நீல பைங்கிளி, பஞ்சவர்ண புறா, வண்ணச்சிட்டு, மைனா, கவுதாரி, பனங்காடை போன்ற வன உயிரினங்கள் வளர்ப்பது குற்றமாகும். அவ்வாறு பொதுமக்கள் வீடுகளில் வளர்க்கக் கூடிய வன உயிரினங்களை ஜூன் 30-ந்தேதிக்குள் வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வன அலுவலர் ஹேமலதா கடந்த மே 26-ந் தேதி அறிவித்தார்.

அதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளில் வளர்த்த 10 பச்சைக்கிளிகளை மாவட்ட வன அலுவலகம் மற்றும் வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைத்தனர்.ஒப்ப டைக்கப்பட்ட பச்சைக் கிளிகள் பராமரிக்கப்பட்டு மாவட்ட வன அலுவலர் முன்னிலை யில் வனத்தில் விடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 2 பச்சைக்கிளிகள் மாவட்ட வன அலுவலக வனத்தில் மாவட்ட வன அலுவலரால் விடுவிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் வளர்க்கும் வன உயிரினங்களை தாமாக முன்வந்து வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் வனக் கோட்ட களப்பணி யாளர்களால் ரோந்து பணியின் போது கண்டு பிடிக்கப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் ஹேமலதா தெரிவித்தார்.

Tags:    

Similar News