முதுகுளத்தூர் பகுதிக்கு கூடுதலாக 41 பஸ்கள்
- முதுகுளத்தூர் பகுதிக்கு கூடுதலாக 41 பஸ்கள் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
- அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரே வாரச் சந்தை ரூ.2 கோடியே 45 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள புதிய வாரச்சந்தையின் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். நவாஸ் கனி எம்.பி., முருகேசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்த னர். முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் வரவேற்றார்.
அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்து கொண்டு புதிய வாரச் சந்தையை திறந்து வைத்தார். விழாவில் முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி, மாவட்ட ஊராட்சி துணை சேர்மன் மாவீரன், வேலுச் சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலு வலர் அன்புக்கண்ணன், முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, பேரூராட்சி துணைத் தலைவர் வயணப் பெரு மாள் ஆகியோர் கலந்து கொண்டனா்.
பின்னர் முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 100 பெண்க ளுக்கு சீர்வரிசைகளை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் பேசுகையில், முதுகுளத்தூர் பகுதியில் கூடுதலாக 41 பஸ்கள் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது. பார்த்திபனூர் பைபாஸ் சாலை பணிகள் முடிவ டைந்து விட்டன. கமுதி- சாயல்குடி பகுதியில் மில் தொடங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் வள்ரச்சித் துறை அலுவலர்கள் சசிகலா, லாவண்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.