உள்ளூர் செய்திகள் (District)

அனைத்துதுறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை வழங்கிய போது எடுத்த படம்.

அனைத்துதுறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

Published On 2022-06-22 08:36 GMT   |   Update On 2022-06-22 08:36 GMT
  • அனைத்துதுறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.
  • பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என புகாா் எழுந்தது.

ரெயில்வே பாலம் கட்டுதல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதியின்மை, நீராதார கண்மாய்கள் தூா்வாரப்படாதது என பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

இதையடுத்து வருவாய்த் துறை, மருத்துவத் துறை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகத்தினா் மற்றும் மீன்வளத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளையும் அழைத்து, திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

மக்கள் நலத்திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்ற அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Tags:    

Similar News