சுய உதவிக் குழுக்கள் மூலம் குறைந்த விலையில் தேசியக்கொடிகளை தயார் செய்ய முடிவு
- சுய உதவிக் குழுக்கள் மூலம் குறைந்த விலையில் தேசியக்கொடிகளை தயார் செய்ய முடிவு எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- கொடிகள் தேவைப்படுவோர் மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு தங்களின் தேவையை பதிவு செய்யலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து உரிய மரியாதை செலுத்திட பிரதமர் மோடி வெளியிடப்பட்ட அறிக்கையினை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் தேசியக்கொடி, தரமான தாகவும், மிக குறைந்த விலையிலும் மற்றும் எளிதில் அருகாமையில் கிடைக்கும் வகையிலும் செய்திட மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.
அதில் ஒரு நடவடிக்கை யாக கிராமங்களிலுள்ள சுய உதவிக் குழுக்கள் மூலம் குறைந்த விலையில் தரமான கொடிகளை குழுக்கள் மூலமாகவே தயார் செய்து குழு உறுப்பி னர்களுக்கும், கிராம மக்களுக்கும் மிக விரைவில் கிடைத்திடவும், இதன் மூலம் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு வருமானத்தையும் ஏற்படுத்தி தரும் வகையிலும் 11 வட்டாரங்களில் 33 குழுக்கள் மூலம் சுமார் 50 ஆயிரம் கொடிகள் தைத்து வழங்கிடவும் 1 லட்சம் தயார் நிலையில் உள்ள கொடிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்திடவும் மாவட்ட கலெக்டரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கொடிகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கிராம ஊராட்சிகளில் தேசியக் கொடி தேவைப்படு வோர் சில்லரையாகவோ, மொத்தமாகவோ அந்தந்த ஊராட்சிகளில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு ஒன்றியங்கள் வாரியாக கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது. ராமநாதபுரம் 96007-17293, திருப்புல்லாணி 63745-34691, மண்டபம் 95003-70615, ஆர், எஸ்.மங்களம் 91594-69563, திருவாடணை 97863-51888, பரமக்குடி 87788-38898, நயினார்கோவில் 99421-30078, போகலூர் 95004-64169, முதுகுளத்தூர் 90806-98257, கமுதி 90473-75371, கடலாடி 95142-68837. எனவே, கொடிகள் தேவைப்படுவோர் தங்களின் தேவையை பதிவு செய்யலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.