ராமநாதசாமி கோவிலில் முழு நேர அன்னதான திட்டம்-மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- ராமநாதசாமி கோவிலில் முழு நேர அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது.
- விழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசாமி கோவிலில் இன்று முதல் முழு நேர அன்னதானத் திட்டம் தொடங்கியது.
இதற்கான தொடக்க விழா கோவிலின் தெற்கு நந்தவன கலை அரங்கில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து கோவிலின் முழுநேர அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
இதில் ராமேசுவரம் தாசில்தார் உமா மகேஸ்வரி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனஜெயன், ராமேசுவரம் கோவில் கூடுதல் ஆணையர் மாரியப்பன், சிவகங்கை மண்டல ஆணையர் பழனிக்குமார், ராமேசுவரம் நகர மன்ற தலைவர் நாசர்கான், நகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் ராமேசுவரம் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.